கோதுமை மாவின் விலை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாவின் விலையை அதிகரிக்க கம்பனிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதனை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் கடைசியாக கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து 87 ரூபாவுக்கு விற்பனையாகிய மா தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாவின் விலையை அதிகரிக்க கம்பனிகள் விடுத்த கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.