இந்த பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சளை தொடவே கூடாதாம்? மீறினால் ஆபத்தாம்!

பழங்காலத்தில் இருந்தே மஞ்சள் மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. இது சமைப்பதற்கு மட்டுமின்றி சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது.

மேலும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்ட்டிமுட்டஜெனிக்  , ஆன்ட்டிகார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.

இருப்பினும் மஞ்சளை ஒரு குறிப்பிட்டவர்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மீறி சேர்த்து கொண்டால் ஆபத்தையே விளைவிக்கும்.

அந்த வகையில் யாரெல்லாம் மஞ்சள் பயன்படுத்தக் கூடாது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

  • இரத்த சோகை உள்ளவர்கள் மஞ்சளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சளானது இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை உறிஞ்சுவதை தடை செய்கிறது. சிவப்பு அணுக்களை குறைக்கிறது. எனவே இது நிலமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
  •  சமையல் தவிர வேறெந்த விஷயத்திற்காகவும் மஞ்சளை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் சமையலில் சேர்க்கும் போது மஞ்சளின் குர்குமின் அளவு குறைந்துவிடும். ஆனால் வீட்டுக் குறிப்பு, வீட்டு மருத்துவத்திற்கு நேரடியாக மஞ்சள் பயன்படுத்துவது குர்குமின் அளவை அதிகரிக்கும். அவ்வாறு செய்வதால் மாதவிடாயை தூண்டும். கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.
  • இரத்தம் வடிதல் பிரச்சினை , இரத்தப்போக்கு , இரத்தம் அடர்த்தியாகுதல் , இரத்தம் உறைதல் இப்படி இரத்தம் தொடர்பான பிரச்னை இருந்தால் அவர்கள் கட்டாயம் மஞ்சளை எடுத்துக்கொள்ள கூடாது.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்க வேண்டும் எனில் மஞ்சள் சேர்ப்பதை தவிருங்கள். ஏனெனில் மஞ்சள் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இது நிலைமையை இன்னும் மோசமாக்கலாம்.
  • மஞ்சள் ஆக்சலேட்டை உற்பத்தி செய்யக் கூடியது. அது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை அதிகரிக்கும். அதன் பாதிப்பை தீவிரமாக்கலாம். எனவே மஞ்சளை தவிருங்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் சேர்த்துக்கொள்வது நல்லது?

  • ஒரு நாளைக்கு 500-2000 மில்லி கிராம் மஞ்சள் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன.
  • சமையலில் 2,000-2,500 மி.கி மஞ்சள் சேர்த்தால் 60-100 மி.கி குர்குமின் மட்டுமே நமக்கு கிடைக்கும். இந்த அளவு குர்குமின் உட்கொள்ளல் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை