இலங்கைக்கு வருகை தந்த 24,320 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, 250 சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் தொற்று

கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தந்த  24,320 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, 250 சுற்றுலாப் பயணிகள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் சுமார் 150 பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் அந்தந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கோவிட் நோய் கண்டறியப்பட்ட மேலும் 100 சுற்றுலா பயணிகள் இன்னும் நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் யுக்ரைனுடன், சுற்றாலாவை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்களை அறிவிக்க இன்று, சுற்றுலா அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.