இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்னுரிமை வழங்கு வேண்டிய வகுப்புகள் தொடர்பிலான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.சி.ஈ உயர்தர மாணவர்கள், ஜி.சி.ஈ சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முதலில் பாடசாலைகளை அரம்பிக்க திட்டமிடப்பட்டள்ளது.

ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தளவிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரம் தொடர்பிலான மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.