மேலுமொரு வைத்தியர் கொரோனாவால் பலி!

ஆனமடுவை பிரதேச மேலதிக சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


உயிரிழந்த வைத்தியர் கடவத்தையில் வசிக்கும் ஜெயசூர்ய என்றும் அவர் இரு குழந்தைகளின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.

நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த அவர், அதன் பின்னர் ஆனமடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சுமார் 10 நாட்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.