குத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்தின் ரகசியம் உங்களுக்கு தெரியுமா? வாங்க என்னவென்று பார்க்கலாம்

மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவை, அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது.

ஒளியினால் சுற்றி உள்ள இருள் நீங்குவது போல, ஐந்து நற்குணங்களினால் நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருளும் விலகி பிரகாசம் நிரம்பியதாக மாறும் என்பது ஐதீகம்.