எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இத்தகவலை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். அத்துடன் பொருளாதார மையங்கள் நாளை மற்றும் திங்கட்கிழமை திறந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடமாடும் விற்பனையாளர்கள் காய்கறிகள் மற்றும் மீன்களைப் பேலியகொட மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தையில் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .