பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை www.donet.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.