சிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரா? உங்களுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

இந்த நவீன காலத்தில் சூடாக சமைத்து சாப்பிடுவதை விட இரண்டு, மூன்று நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது தான் அதிகம். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்க பெரும் வாய்ப்புள்ளது.

சைவத்தை காட்டிலும் அசைவமான சிக்கனை பிரிட்ஜில் வைப்பதால் பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன. அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு.

இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.

நோய்த்தொற்றுகள்:-

  • இது போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை கர்ப்பக்காலத்தில் எடுத்து கொண்டால் பெண்ணுக்கு மட்டுமில்லாமல் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு உண்டாகும்.
  • சிக்கன் மட்டுமல்ல ஃபிரக்கோலி, மீன் போன்ற பல உணவுப்பொருள்களை பச்சையாகவோ அல்லது சமைத்தோ ஃபிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால் அதிலுள்ள பாக்டீரியாகக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கி வீக்கம் அடைய செய்கின்றது.
  • தலை முதல் பாதம் வரை பாக்டீரியா தொற்றுக்கள் ரத்தத்தின் வழியாக ஊடுருவுகிறது. இதன்மூலம் உடல் உள்ளுறுப்புகள், தொண்டை,குடல் மற்றும் பிறப்புறுப்புகள் ஆகியவற்றில் பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த சிக்கனை சாப்பிடுவது செரிமான கோளாறுகளை உருவாக்கும். அதிலும் பிரிட்ஜில் வைத்து பாக்டீரியாக்களால் சூழப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால் உடலின் சீரான இரத்த ஓட்டம் தடைபடுகிறது.