சந்திரிக்கா குமாரதுங்க தனது நண்பனுக்காக செய்த நெகிழ்ச்சியான செயல்

கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான 175 குடும்பங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உதவியுள்ளார்.

குறித்த குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர உயிரிழந்து இரண்டு வாரங்களாகியுள்ளது. தனது மிகவும் நெருங்கிய நண்பரான மங்களவின் நினைவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  இந்த உதவியை பதவியுள்ளார்.

இது தொடர்பில் அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொவிட் தொற்று காரணமாக மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள குடும்பங்களை தெரிவு செய்து இந்த உணவு பொதியை வழங்க நடவடிக்கை எடுத்தேன்.

சிரமமான காலம் என்ற போதிலும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.