இரகசிய இடத்தில் பாரிய முட்டைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மலைப்பாம்பு..!! பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்!

மாத்தறை – அக்குரஸ்ஸ, பிட்டபெத்தர,குடகலஹேன என்ற இடத்தில் பாரிய கற்பாறைக்கு அருகில் மலைப்பாம்பின் இருப்பிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த மலைப்பாம்பு அங்கு 40க்கும் அதிகமான முட்டைகளை இட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.


குடகலஹேன பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றுக்கு அருகில் குறித்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலறிந்த மக்கள் குறித்த மலைப்பாம்பை பார்ப்பதற்கு வருகைத்தந்த வண்ணம் உள்ளதாக அக்காணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.