இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டில் கொவிட் தொற்று தீவிரமடையும் சந்தர்ப்பத்தில் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்த சில விடயங்களை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார்.

தேங்காய் நீருடன் தேசிக்காய் மற்றும் உப்பு சேர்த்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் நீரில் தேசிக்காய் சேர்த்து குடிப்பதால் உடலுக்கு சக்தி கிடைக்கின்றது என உலகில் பல நாடுகள் நம்புகின்றது.

இதுவே வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவ துறையை சேர்ந்த பலரின் கருத்தாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.