தென்னாபிரிக்காவின் புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் மக்களுக்கு எச்சரிக்கை!

தென்னாபிரிக்காவின் புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தென்னாபிரிக்காவின் புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம். அவ்வாறு வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உலகில் வேறு எந்தப் பொறிமுறையும் இல்லை.

சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரி மூலம் கண்டறியப்பட்டால் மட்டுமே நாட்டில் ஒரு புதிய மாறுபாடு அடையாளம் காண முடியும். எந்தவொரு கொரோனா மாறுபாடும் இலங்கைக்குள் நுழையலாம் என்றும் அதைத் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரச்சினை யாதெனில், குறிப்பிட்ட மாறுபாடு நாட்டில் பரவிய பிறகு ஒரு மாதிரி மூலம் கண்டறியப்பட்டால் மட்டுமே இலங்கைக்குள் அந்த மாறுபாடு நுழைந்துள்ளது என்பதை நாம் அறிய முடியும் என தெரிவித்தார்.

ஏனெனில், நாம் முன்கூட்டியே அறிந்து கொண்டு அந்த மாறுபாடு ஒரு நாட்டிற்குள் நுழைவதை நிறுத்தவும் முடியாது என்றும் அவர் கூறினார். சீ 12 என்ற குறித்த கொரோனா வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் பரவி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.