யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய, வருடாந்த மஹோற்சவம் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், கொவிட் அச்சம் காரணமாக செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதும் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம் மாதம் 06 ஆம் திகதி மஹோற்சவத்தை நடாத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் ஆலயத்தின் இவ் வருட மஹோற்சவம் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.