நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களையும் திறக்க அனுமதி

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், இன்று திறக்கப்பட்டுள்ளன என  இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அததுடன் குறித்த பொருளாதார மையங்கள் நாளை தினமும் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படும். சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அதன் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

வர்த்தகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் போக்குவரத்து அனுமதியினை தங்களது பிரதேச செயலங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.