யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை இதுதான்

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டவுள்ளது.

இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

ஒரு இராத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பணிஸ் வகைகள் ஆகக் கூடிய சில்லறை விற்பனை விலையாக ரீ பணிஸ், கொம்பு பணிஸ், பேஸ்ரி, சங்கிலி பணிஸ், ஜாம் பணிஸ், கறி பணிஸ் முக்கோண பணிஸ் என்பன 40 ரூபாயாகவும், கிறீம் பணிஸ் 50ரூபாவாகவும், அடைக் கேக் 30 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.