இலங்கையில் 500 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.

இவர்கள் சீதுவ, லியனகேமுல்ல மற்றும் அங்கன்பிட்டிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கம்பஹா, வேயங்கொடை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 21, 43 மற்றும் 45 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 602, நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய கணினி, அச்சு இயந்திரம், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் 500 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.