கொரோனாவுக்கு பின்னர் மாறப்போகும் உலகம்..!

விமானப் பணிப்பெண்களின் அழகிய புன்னகை இனியில்லை!கடலில் குளித்து விட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட இனிமேல் கண்ணாடித் திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுகாப்பாக உணரச் செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன.சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்குத் தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான்’ என்கிறது ஆர்ஜென்டினா விமானப் போக்குவரத்து சேவை.தனது விமானப் போக்குவரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த முறை விடுமுறை நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இனிமேல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் மக்கள் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.விமான நிலையங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை இங்கு பார்ப்போம்.

அமெரிக்காவில் விமான நிலைய சோதனைக்கு உட்படுத்தப்படும் முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை விமான நிலையத்திலேயே கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவும் 20 செச்கன்களுக்கு கை கழுவுவது அவசியம் என்றும் அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.உலகில் உள்ள பல விமான நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முழுவதும் ‘ஹான்ட் சனிட்டைசர்கள்’ பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.சில நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் முழு உடலையும் கிருமிநாசினி சாதனத்தால் சுத்தம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதாவது உடலின் தோல் மற்றும் ஆடை மீது உள்ள கிருமிகளை முழுவதும் அகற்ற புதிய கருவிகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் ஒருவரின் ஆடை மற்றும் அவரின் தோல் மீது உள்ள கிருமியை ஒழிக்க 40 செக்கன்கள் மட்டுமே ஆகும். அவ்வாறு இந்த நடைமுறையை பின்பற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், புறஊதா ஒளியால் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றை அழிக்க தானியங்கி ரோபோக்களையும் பயன்படுத்தப் போவதாக விமானநிலையமொன்று அறிவித்துள்ளது.விமான நிலையத்தில் பயணச்சீட்டுஇ இருக்கை எண் பெற எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் உள்ள விமான நிலையங்கள் அந்த இயந்திரங்களையே நாள்தோறும் முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. தேவையற்ற தொடர்புகளை தவிர்க்க இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்த எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் உதவும்.ஏற்கனவே விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட உடல் வெப்பம் அறியும் கருவிகளால் பயனில்லை என ‘இன்ட்ரீபிட்’ பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் தொர்ந்டோன் கூறுகிறார்.

அறிகுறிகள் இன்றி பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், சர்வதேச அளவில் வெளிநாடுகளில் இருந்து வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார் ஜேம்ஸ் தொர்ந்டோன்.ஐக்கிய அரபு அமிரகத்தின் துபாய் விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட் 19 வைரஸுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் 10 நிமிடங்களில் வழங்கப்படுகின்றன என்று துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக நாம் விமானத்திற்குள் நுழையும் போது விமானப் பணிப்பெண்கள் நம்மை புன்னகையுடன் வரவேற்பார்கள். ஆனால் இனி முகக்கவசம் அணித்தபடியே வரவேற்பு அமையும். அதே போல நம்முடன் பயணிப்பவர்கள் அனைவரும் கூட முகக்கவசம் அணிந்தபடியே காணப்படுவார்கள். மேலும் கொரியாவைச் சேர்ந்த விமானத்தில் பயணம் மேற்கொள்வது இன்னும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.விமானப் பணிப்பெண்கள் முழுப் பாதுகாப்பு கவசத்தை அணிந்து, கண்களில் கண்ணாடி அணிந்து முகத்தைத் திரையிடவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் பி.பி.இ என்று அழைக்கப்படும் முழுப் பாதுகாப்பு ஆடைகளை விமான நிலைய ஊழியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும், விமானத்தின் மூன்று இருக்கைகளில் இரண்டு பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். நடுவில் உள்ள இருக்கையில் யாரும் அமர அனுமதியில்லை.இதனால், குறைந்த எண்ணிக்கையிலான பயணச்சீட்டுகளே விற்கப்படும். விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.இத்தாலியின் கடற்கரையில் சூரியக் குளியல் மேற்கொள்ளும் அனுபவமும் இனி வேறுபடும். சூரியக் குளியல் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் நாற்காலிகள் கண்ணாடித் திரைகள் மூலம் பிரிக்கப்படும். இதற்கான வரைபடங்கள் கூட வட ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் ஐரோப்பிய நாடுகளில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும். மேலும் இத்தாலியின் தங்கும் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் இப்போதைக்கு இயங்கப் போவதில்லையென ஐரோப்பிய சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரியும் உல்ஃப் சோன்டேக் கூறுகிறார். அதே போல உணவகங்களில் உள்ள நாற்காலிகளும் அதிக இடைவெளி விட்டு பராமரிக்கப்படும்.

சமீபத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து குழு நடத்திய ஆய்வில் ‘ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்த்தப்பட்டவுடன் எப்போது விமான பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்வீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு 60 சதவீதத்தினர் ‘இரண்டு மாதங்களுக்கு விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய மாட்டோம்’ எனத் தெரிவித்தனர் 40 சதவீதத்தினர் ஆறு மாதத்திற்கு விமானப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை’ என்றும் தெரிவித்தனர்.