இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 204.89 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை திறைசேரி செயலாளர் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும், சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் நாட்டுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.