நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் கற்றாழை சாப்பிட்டால் இத்தனை நன்மையா?

இன்றைய காலத்தில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றார்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதனை பொதுவாக சர்க்கரை நோய் என்று நாம் அழைக்கிறோம். நீரிழிவு என்பது ரத்தத்தில் ஏற்படும் ஒரு சாதாரண சர்க்கரை அளவிலான ஏற்ற இறக்கமாகத் தோன்றலாம்.

ஆனால் அது கட்டுப்படுத்தப்படாவிட்டால் அல்லது சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் மிகப்பெரிய உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எளிதில் கிடைத்தாலும், உணவுப்பழக்கங்கள் மற்றும் இயற்கையான சில வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த முயற்சித்தால் நல்லது.

இதற்கு கற்றாழை மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் மற்றும் ஜெல் ஆகியவை இயற்கையாகவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

எவ்வாறு உதவுகின்றது?

கற்றாழையை உணவாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், மருந்து மாத்திரைகள் அல்லது மற்ற ஜூஸ்களைக் காட்டிலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் பார்க்க முடியும்.

சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தை கண்டுபிடித்தவுடன் அதற்குரிய மருந்துகளை காலதாமதமில்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்போது, மருந்து எடுத்துக்கொள்வதை புறக்கணித்தால், நோய் மோசமான நிலையை அடைகிறது. இதனால், தொடக்க நிலையிலேயே கற்றாழையை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு குறித்தும் மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது.