2000 ரூபாய் கிடைக்கப்பெறாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரசாங்கம் 2000 ரூபாய் வழங்கி வருகின்றது.

இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற்றும் இதுவரை பெறாத மக்கள் அதிகமானோர் இன்னமும் உள்ளனர். அவ்வாறு கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற நூற்றுக்கு 50 வீதமான மக்களுக்கு இதுவரையில் 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிடைக்காதவர்கள் கிராம சேவகர் ஊடாக விண்ணப்பித்துக் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.