அரசாங்க ஊழியர்களிடம் மிக முக்கியமான வேண்டுதலை முன் வைக்கும் ஜனாதிபதியின் செயலர்..!!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தனது மே மாத சம்பளத்தை, விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் நலனிற்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத கொடுப்பனவின் போதும், அவர் இதேபோன்ற ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்தார். அதை தொடர்ந்து, அது அரச தரப்பினால் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, அரச ஊழியர்கள் தமது சம்பளத்தில் அரைவாசியை வழங்க வேண்டுமென கூறப்பட்டது. சட்டரீதியான உத்தரவாக அல்லாவிடினும், அரச ஊழியர்கள் தமது அரைவாசி சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் நிலைமையேற்பட்டது.

இம்மாதமும் அதேவிதமான முன்ளேற்பாட்டு அறிவித்தலொன்றை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ளார்.அரச ஊழியர்கள் தமது சம்பளத்தின் ஒரு பகுதியை விதமைகள் மற்றும் ஆதரவற்றவர்களிற்கு வழங்கினால், மே மாதத்தில் அரச செலவை நிர்வகிப்பது இலகுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,அமைச்சர்கள், அரச வங்கிகள், மாகாண நிறுவனங்கள், நிறுவன தலைவர்கள், பிரதமரின் செயலாளர், ஜனாதிபதியின் செயலக ஊழியர்கள், அனைத்து அரச ஊழியர்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்கலாமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அனைவருக்கும் ஒரு மாத சம்பளத்தை விட்டுக் கொடுப்பது கடினம் என்பதால், அரை மாத சம்பளம், ஒரு வார சம்பளம், ஒரு நாள் சம்பளம் என விரும்பிய அடிப்படையில் விட்டுக் கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.