பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் அமைச்சரவை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவை நியமித்திருந்தது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இருந்து பல கட்டங்களின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.