வாழ்வில் ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்

சில பேர் கஷ்டத்தை நன்றாக அனுபவித்த பின்பு, தங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய், ஜோதிடரிடம் காட்டி, கெட்ட நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பின்புதான் நமக்கு ஏதோ ஒரு செய்வினை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். இதையெல்லாம் கஷ்டத்தை அனுபவித்த பின்பு தான் நாம் உணர்வோம். ஆனால் கஷ்டம் வருவதற்கு முன்பாகவே, சில அறிகுறிகள் மூலம், நமக்கு ஏதோ ஒரு கெடுதல் நடக்கப்போவது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது எவரையும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படக் கூடிய விஷயம் அல்ல. பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், உஷாராக இருந்து கொள்ளலாம் அல்லவா? அதற்காகத்தான். பிரச்சினையை முன் கூட்டியே தெரியப்படுத்தும் அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

தினம்தோறும் எவரொருவர் தன் வீட்டு குல தெய்வத்தை மறக்காமல் வழிபடுகிறார்களோ, அவருக்கு வரப்போகும் கஷ்டமானது முன்கூட்டியே தெரிந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எந்த ஒரு ரூபத்திலாவது, உங்கள் வீட்டு குல தெய்வமே வந்து உங்கள் குலத்தை காக்கும். வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் உங்களின் குலதெய்வம் பெயரை வீட்டில் தீபம் ஏற்றும்போது சொல்லி, அந்த குல தெய்வத்தை மறக்காமல் வழிபடுவது என்பது வேறு. குலதெய்வத்தின் அருள் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வரக்கூடிய கஷ்டத்தை சுலபமாக சந்திக்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நடக்கப்போகும் கெட்டதை முன்கூட்டியே சொல்லும் அறிகுறிகள் என்னென்ன என்பதை சில சாஸ்திர குறிப்புகள் கூறியுள்ளது அவை பின்வருமாறு:
என்றைக்கும் இல்லாமல் சில சமயங்களில் கருவண்டு ஒருவரது வீட்டை வலம் வந்து கொண்டே இருக்கும். எவ்வளவுதான் விரட்டி அடித்து கொண்டே இருந்தாலும், சில நேரம் கழித்து, திரும்பவும் வந்து அந்த வீட்டில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது. அதன்பின்பு அந்த வண்டானது, வேகமாக அங்கு இருக்கும் ஏதோ ஒரு சுவற்றில் முட்டி அதே இடத்தில் கீழே விழுந்து கூட இறக்க நேரிடலாம். இப்படி ஒரு சம்பவம் உங்கள் வீட்டில் நேரிட்டால் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

அடுத்ததாக வௌவால்கள். இந்த வௌவால்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி வலம் வந்தாலும், கூடு கட்டினாலும் கட்டாயம் உங்களுக்கு மறைமுகமான எதிரிகள் மூலம் ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறது என்பதை குறிக்கிறது. அதாவது உங்கள் எதிரிகள் உங்களுக்கு செய்வினை வைக்க போகிறார்கள் அல்லது வைத்துள்ளார்கள் என்பதை அறிவுறுத்து வதற்கான சகுனம் இது.

பொதுவாகவே, கழுதையை பார்த்தால் நல்ல சகுனம் என்று சொல்லுவார்கள். முந்தைய காலங்களில் எல்லாம் என்னைப்பார் யோகம் வரும் என்ற வாசகத்தோடு இரண்டு கழுதை உருவம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அது நல்ல சகுனம் தான். ஆனால், நீங்கள் எதேர்ச்சியாக செல்லும்போது, உங்கள் முன்பு கால் உடைந்த நொன்டி கழுதை வந்தால் அது உங்களுக்கு வரக்கூடிய பெரிய ஆபத்தை முன்கூட்டியே சொல்லுவதாக அர்த்தம். அதாவது  உங்கள் வாழ்க்கையை கெடுப்பதற்கு ஏதோ ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை குறிப்பதாக சில சாஸ்திர நூல்களில் குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

அஷ்டமி திதியன்று அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று அண்டங்காக்கா உங்கள் வீட்டில் கத்திக்கொண்டு இருந்தால் இதுவும் ஒரு அபசகுணம் தான். இந்த அறிகுறி உங்களுக்கு மறைமுகமாக ஏதோ ஒரு பிரச்சினை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.

இவ்வாறாக சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ள சகுனங்கள் யாவும், யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லப்பட்டது அல்ல. உங்களுக்கு வரப் வரப்போகும் கெடுதலை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஜோதிடரையோ அல்லது உங்களுக்கு தெரிந்த மாந்திரீகர்களையோ வைத்து என்ன கெட்டது இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கான பரிகாரங்களை செய்வதற்காகத்தான் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.