இலங்கையில் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களும் மரணம்!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் நூற்றுக்கு 3 வீதமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களில் 13 வீதமானோர் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒக்ஸிஜனுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1033ஆக அதிகரித்துள்ளதாக கொவிட் தொடர்பான வைத்திய அதிகாரி அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. எப்படியிருப்பினும் இதுவரையில் வைத்தியசாலைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை என வைத்தியர் அனவர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக் கொள்ளாத 84 வீதமானோர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.