மரண சடங்கில் கலந்து கொண்ட 30 பேரில் 28 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இம்மாதம் 24 ஆம் திகதி வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் வைத்தியசாலையில் அன்ரியன் பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரணசடங்கில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு இன்று அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததில் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், அவர்கள் மீது சுகாதார பிரிவினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா தாண்டவமாடி வரும் நிலையில் இவ்வாறான சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோ தேவையற்ற விதத்தில் வெளியே செல்வதனை தவிர்க்குமாறும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.