மேஷ ராசிக்காரர்கள் இதை செய்தால் வாழ்க்கையே மாறிவிடுமாம்! வாங்க என்னவென்று பார்ப்போம்

மனிதராக பிறந்த ஒவ்வொருக்கும் வாழ்வில் சில லட்சியங்கள் இருக்கும். அந்த லட்சியத்திற்கு குறுக்கீடு செய்யும் வகையில் அமைந்திருப்பது ஜனன ஜாதகம். நீங்கள் பிறக்கும் போது கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து உங்களது வாழ்வில் என்ன பலன்கள் கொடுக்க போகிறது என்பதை ஜோதிட சாஸ்திரம் தெள்ள தெளிவாக கூறிவிடுகிறது. அதில் உங்கள் கர்ம வினைப்படி பாவ, புண்ணியம் என்று இரண்டும் கலந்து நல்லது, கெட்டது என்ற இரண்டை தீர்மானம் செய்கிறது. அதில் இருந்து விடுபட பழங்கால ஜோதிட சாஸ்திர புத்தகம் ஒன்றில் சுலபமான பரிக்காரங்கள் கூறபட்டுள்ளது. அந்த புத்தகம் பற்றிய வரலாறு என்ன? அதில் அப்படி என்ன தான் கூறி உள்ளனர் என்று இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

‘லால் கிதாப்’ என்பது தான் அந்த புத்தகத்தில் பெயர். ‘லால் கிதாப்’ என்பது ஹிந்துக்களின் ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரம் சார்ந்த ஒரு அற்புத நூல். ‘லால் கிதாப்’ என்கிற இந்த வார்த்தை உருது மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். ‘சிகப்பு புத்தகம்’ என்பது இதன் பொருளாகும். வட இந்திய மக்களால் பெரிதாக பின்பற்றி வரும் பரிகாரங்களில் ஒன்றாக ‘லால் கிதாப் பரிகாரங்கள்’ உள்ளது. ஒவ்வொரு ஜனனத்தின் போதும் நிலவும் கிரக நிலைகளின் அடிப்படையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எளிய முறையில் தீர்வு சொல்கிறது இந்த புத்தகம். இந்த நூல் பாரசீகத்தின் சாயலை கொண்டது என்கிறது ஒரு ஆய்வு. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளில் அதிகம் வாழும் இந்தியர்களாலும் இந்த முறைகள் பின்பற்றபட்டு பலன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களாலும் பாகுபாடின்றி தங்களின் ராசிக்குரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வகையில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தகம் அப்படி என்னென்ன பரிகாரங்கள் கூறியுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்களது வீட்டில் எழுமிச்சை செடி வைத்திருக்க கூடாது. இருந்தால் எடுத்து விடுங்கள். இதனால் பிரச்சனைகள் குறையும்.

உங்களது ராசிக்கு நீங்கள் சிவப்பு வண்ணத்தால் ஆன கைக்குட்டையை தொடர்ந்து உபயோகப்படுத்துவது நல்ல பலன் தரும்.

யாரிடமும் எதையும் காசில்லாமல் பெறக்கூடாது. சிறு பணம் கொடுத்தாவது பெற்றுக் கொள்வது நல்லது.

இரவு தூங்கும் முன்னர் ஒரு சொம்பு நிரம்ப நீர் பிடித்து தலைக்கு மேல் வைத்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்து செடி, கொடிகளுக்கு ஊற்றி வர பாவங்கள் நீங்கும்.

பெண்கள் வெள்ளியால் ஆன வளையல் அல்லது காப்பு அணிந்து கொள்வது எண்ணற்ற நன்மைகளை தரும்.

ஆண்கள் எந்த விதமான வேலைபாடும் இல்லாத வெள்ளி காப்பு அணிந்து கொள்வது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.

உங்களை உலகிற்கு கொண்டு வந்த உங்கள் பெற்றவர்களுக்கும், அனைத்து வித்தைகளையும், பாடங்களையும் கற்பித்த குருமார்களுக்கும், இறைவனை பணிந்த அடியார்க்கும், மகான்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகள் செய்வது புண்ணியம் தரும்.