பல்வலியால் பெரும் அவஸ்தையா? இதை ட்ரை பண்ணுங்க இனி பல்வலியே வராது!

பல் வலி என்பது எல்லாருக்கும் தாங்க முடியாத வேதனையை அளிக்கக்கூடிய விஷயமாகும். பல்வலி வந்தால் அவ்வளவு சீக்கிரம் சாதாரணமாக நிற்காது.

அதனால் தான் நிறைய மக்கள் வலியை தாங்க முடியாமல் பல்லை பிடுங்கி விடுவது உண்டு.

ஆனால் இப்படி எத்தனை பற்களை பிடுங்குவீர்கள். பற்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இவைகள் நம் உணவை ஜீரணிக்க நிறைய வகைகளில் உதவுகிறது. எனவே ஆரம்பத்திலே இது போன்ற பிரச்சினை தீர்ப்பத நல்லது.

அந்தவகையில் தற்போது பல்வலியை போக்க கூடிய எளிய முறைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

  • விரல் அளவு உள்ள சிறு வேப்பங்குச்சி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் உள்ள அதன் தோலை உரித்து விட்டு, ஒரு முனையை மென்று அதனை பிரஷ் போல ஆக்கிக் கொள்ளுங்கள். அதனைக் கொண்டு உங்களின் பற்களை துலக்குங்கள். ஈறுகளிலும் அந்த குச்சியைக் கொண்டு சிறுது நேரம் துலக்கி விட்டு, பின் உங்களின் வாயைக் கொப்பளித்தால் போதும்.
  • பூண்டு, கல் உப்பு, கொய்யா இலைகள் மற்றும் மாமர இலைகள் போன்றவற்றைக் கொண்டு பல் துலக்கலாம். இதனை ஏதேனும் ஒன்றை அரைத்து பற்களில் தேய்க்கலாம். அரைத்த பொருளுடன் எண்ணெய் மற்றும் உப்பு கலவையை சேர்த்தும் பயன்படுத்தலாம். இது உங்களின் ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது.
  • ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த எண்ணையை வாயில் ஊற வைத்து பின்பு கொப்பளித்துத் துப்பவும்.
  • பற்கள் மட்டுமின்றி நாக்கிலும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுகள் தேங்குகின்றன. இது, வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது. நாக்கை சுத்தம் செய்வது, வாயில் உள்ள நச்சுகளை நீக்கி புதிய சுவாசத்தை ஊக்குவிக்கிறது.
  • திரிபலா அல்லது அதிமதுரத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீரின் அளவு பாதியாக குறைந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, அதனை குளிர்வித்து பயன்படுத்துவதும் வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தும்.