யாழில் கடந்த 8 நாட்களில் 36 கோவிட் தொற்றாளர்கள் மரணம்!

கோவிட் பரவல் வடக்கு மாகாணத்தில் சமூகத் தொற்றாகப் பரவிவிட்டது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவர் பேராசிரியர் மனுஜ் சி. வீரசிங்க தெரிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 8 நாட்களில் மட்டும் 36 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்ட செயலகத்தின் கோவிட் புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆகஸ்ட் 22ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையிலான 08 நாட்களில் இவ்வாறு 36 கோவிட் மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வடைந்துள்ளது.