இன்றைய தினம் முதல் அடுத்த மாதம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை உச்சம் கொடுக்கும் சூரியன்

இன்றைய தினம் முதல் அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இந்த விடயத்தை வானிலை ஆய்வு மையம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று மதியம் 12.11 அளவில் சூரியன் சங்குப்பிட்டி, யாழ்ப்பாணம் பலாலி போன்ற இடங்களில் சூரியனின் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் இன்று முதல் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.