சித்ரா பௌர்ணமி விரதத்தின் மகிமை..!!

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது.மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்) சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.சிறப்புப் பொருந்திய இத் திருநாள் இந்த வருடம் 07.05.2020 வியாழக்கிழமை அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது.இந் நாளில் தாயாரை இழந்தவர்கள் தனது தாயாரிற்கு பிதிர் தர்பணம் செய்வதுசிறப்பாகும். சித்ரா பௌர்ணமி விரதம் இருந்தால், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும்.சித்திர குப்த நாயனாரை வேண்டி சைவர்கள் விரதமிருந்து வழிபடும் நாளாகவும் சித்ரா பௌர்ணமி இருக்கிறது. அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும் சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இரு வேறு நம்பிக்கைகள் உள்ளன.அம்மன் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி படையல் செய்து மக்களிற்கு வழங்குவதன் மூலம் அம்பிகையின் சீற்றத்தைஇ கோபத்தை தணிப்பதனால் அம்பிகையின் சீற்றத்தால் ஏற்படும் அம்மன் வருத்தம் (கொப்பளிப்பான் சின்னம்மை போன்றவை ) ஏற்பாடாது எம்பது ஐதீகம்.அம்மன் ஆலயங்களில் குளிர்த்தி சோறு படையலிட்டு கொண்டாப்படுவதும் சிறப்பாகும்.குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் சித்திரா பௌர்ணமியன்று அம்மனிற்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, புஸ்பராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவித்து, மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்படி அம்னை பூசித்தால் குழந்தைப் பாக்கியம் கிட்டும். அம்மன் ஆலயங்களில் இப்படியான ஒரு பூசைக்கு ஏற்பாடு செய்யலாம். முடியாத பட்சத்தில் தங்கள் வீடுகளிலேயே அம்மன் படத்திற்கு அல்லது அம்மன் விக்கிரகத்திற்கு இந்த முறையில் பூசை செய்து குழந்தை வரம் வேண்டி வேண்டிக் கொள்ளலாம்.சித்ரா பௌர்ணமி தினத்தில் பெண்கள் விரதமிருந்து சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு செய்யும் ஒரு முறையும் உள்ளது. பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.வீட்டின் பூசை அறையில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, அதன் பின் விநாயகர் படத்தினை வைக்க வேண்டும். காய்கறிகளும், பருப்பும், தயிர் கடையும் மத்தினையும் வைக்க வேண்டும். வினாயகரிற்கும், சித்தர புத்திரனாரிற்கும் சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். திருமணமாக பெண்கள் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வேண்டுமென விரதமிருந்து இந்த பூசை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள்.உப்பில்லாமல் உணவருந்தி விரதமிருப்பது சிறப்பான பலனைத்தரும். பால், நெய், தயிர் தவிர்ப்பதும் நல்லது. விரதமிருப்பவர்கள் உப்பில்லாமல் கதம்பச் சாதம் உண்பது நல்ல பலனைத்தரும்.சித்திர புத்திரன் – சித்திர குப்த நாயனார்- இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் ஒன்றை வரைந்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த நிகழ்வு நடந்தது அதாவது சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) அவதரித்தது சித்ரா பவுர்ணமி தினத்தில் தான். சிவபெருமான் சித்ர புத்திரனாரிற்கு அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து சீவராசிகளினதும் பாவ புண்ணிய கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று இறைவனை நோக்கி தவம் புரிந்தான். சிவபெருமான் காமதேனுவை அழைத்து இந்திரன் தவத்தை கூறினார். சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து அவன் கவலையை தீர்க்குமாறு கட்டளையிட்டார். அதன்படியே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு வருகிறது.