திருகோணமலை ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.