கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடமையாற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு கடமையாற்றும் அரச கள அலுவலர்களுக்கு பயணச் செலவுகள் உள்ளிட்ட கூடுதல் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர்கள் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் சாமல் ராஜபக்ஷ ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வேளாண் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.அதன்படி, இந்த அதிகாரிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ரூ .450 மற்றும் இதரபடியாக ரூபா 150, 600 வழங்கப்படும்அதேபோன்று ரூ .100 கூடுதல் தொலைபேசி கொடுப்பனவாகவும், ரூ .1200 பயண செலவாகவும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.