மெல்ல, மெல்ல 800 ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்..!! 215 பேருக்கு பூரண சுகம்.!!

நேற்று (6) இரவு வரை நாட்டில் 797 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்று 26 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்களி்ல் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்பகுதியை சேர்ந்தவர்.தொற்றுக்குள்ளான 573 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 215 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 573 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.153 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.