கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய 15 வயதான சிறுமி திடீர் மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய 15 வயதான சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந் நிலையில் மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டபோது கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் – மணல்குன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முஹம்மது அமீர் பாத்திமா ருகைய்யா எனும் 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த சிறுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.