வெளிநாடு செல்பவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இலத்திரனியல் அட்டையை வழங்க தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கு இந்த அட்டை வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://t.co/JiBaPSYbmQ என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலம் இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர், இலத்திரனியல் அட்டைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு, இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நபர்களுக்கு இலத்திரனியல் உறுதிப்படுத்தல் அட்டையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டையின் மூலம் வெளிநாடு செல்லும் போது விமான நிலையங்களில் இலகுவான முறையில் பரிசோதனை செய்ய முடியும். QR எனும் தொழில்நுட்பம் மூலம் எமது தரவுகள் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.