எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து எமிரேட்ஸ் விமானம் சேவை ஆரம்பம்

கொழும்புக்கும் – மாலைதீவின் மாலேயிக்கும் இடையிலான சேவையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் மாலைதீவின் சுற்றுலாத்துறையை மீண்டும் மேம்படுத்தும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி துபாய்க்கும் மாலேயிக்கும் இடையிலான சேவையே இவ்வாசறு  கொழும்புக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் துபாயில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும் விமானம், மாலேயின் ஊடாக மீண்டும் துபாய்க்கு திரும்பவுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் முதல் எமிரேட்ஸ் விமானம் மாலேய்க்கும் துபாய்க்கும் இடையிலான சேவையை நாள் ஒன்றுக்கு நான்காக அதிகரிக்கவுள்ளது.

இதேவேளை எமிரேட்ஸ் விமான நிறுவனம் தற்போது உலகளாவிய ரீதியில் 120 பயணிகள் சேவைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.