உங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்!

இன்றைய சூழ்நிலையில் உயிரை கொல்லும் நோய்களில் புற்றுநோயே முதல் இடத்தில் உள்ளது.

வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் கூட புற்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியவர்களில் ஏற்படும் பெரும்பான்மையான புற்றுநோய் வாழ்வியல் நடைமுறைகள் அல்லது சுற்றுச்சூழல் அபாய காரணிகளுடன் வலுவான தொடர்புடையவை. ஆனால் குழந்தைகளின் டிஎன்ஏவில் வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் அல்லது பிறப்பதற்கு முன்பே ஏற்படும் மாற்றங்களின் விளைவே புற்றுநோயாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

ஏனெனில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினமாகும்.

இருப்பினும் ஒரு சில ஆரம்ப அறிகுறிகளை வைத்து புற்றுநோய்கான அறிகுறி என தெரிந்து விடலாம். அந்தவகையில் தற்போது அந்த அறிகுறிகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  1. குழந்தைகளின் எலும்புகளில் ஏற்படும் வலி, மூட்டுவலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
  2. குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகுவலியை எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது. அதிக அக்கறையுடன் கவனிக்க வேண்டும். குழந்தைகள் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படுதல், பேசும் போது நாக்கு குழறுதல் போன்ற பிரச்சினைகள் வந்தால் அதை உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்.
  3. இரண்டு வாரங்களுக்கு மேல் காலை நேரத்தில் வாந்தியுடன் கூடிய தலைவலி தொடா்ந்து இருந்தால் அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்கு காரணம் மத்திய நரம்பு அமைப்பு கட்டிகளாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் பரவலின் காரணாகவும் இருக்கலாம்.
  4. தோற்றம் வெளிரிப் போதல், தோலில் ஊதா புள்ளிகள் ஏற்படுதல், உடல் முழுவதும் நிணநீா் பரவுதல், உயா் இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப்போக்கு போன்றவை மிக விரைவில் பரவக்கூடியதாக இருக்கலாம்.
  5. வறட்டு இருமல், மூச்சுத் திணறுதல், பேசுவதில் தடை போன்றவை உடலிற்குள் மென்மையான அடுக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
  6. ஈறுகளில் ஏற்படும் வீக்கம் லுகேமியா ஏற்படுவதன் அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத் திணறுதல், விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.