கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளை செலுத்திக்கொள்ளாதவர்கள் கொழும்பில் நடமாட தடை!

கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற நடமாடும் விற்பனையாளர்கள் மட்டுமே ஊரடங்கு காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொள்ளாத நடமாடும் ற்பனையாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.