இலங்கையில் அதிகரித்த சீனியின் விலை – நெருக்கடியில் நுகர்வோர்

இலங்கையில் ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 210 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் 160 ரூபாய்க்கு ஒரு கிலோ கிராம் சீனி கொள்வனவு செய்ய கூடிய நிலைமை காணப்பட்டது. எனினும் தற்போது அதன் விலை 210 வரை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் மிகவும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது மிகப்பெரிய குற்றமாக இருந்த போதிலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்களை கண்டிக்கும் வகையில் அபராத பணத்தை அதிகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை இதுவரையில் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இதன் மூலம் இந்த குற்ற செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.