கிரெடிட் அல்லது டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கிரெடிட் அல்லது டெபிட் அட்டை மூலம் ஏதாவது கொடுப்பனவு மேற்கொண்டால் அதற்கான மேலதிகமாக 7 சதவீத அந்நிய செலாவணி சரி செய்தல் கட்டணம் வசூலிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சில வர்த்தக வங்கிகள் இந்த 7 சதவீத கட்டணத்திற்கு மேலதிகமாக 5 சதவீத கட்டணத்தை அறிவிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

சில வர்த்தக வங்கிகள் மேலதிக கட்டணத்தை நாளை தினம் முதல் அறவிடவுள்ளதாகவும் மேலும் சில வங்கிகள் செப்டெம்பர் மாதம் முதல் அறிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடன் அட்டை மூலம் வெளிநாட்டு கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக நிறுத்துவதற்கு வர்த்தக வங்கிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடவடிக்கை மேற்கொண்டது. நாடு எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடியே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதுவரையில் வர்த்தக வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 211 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் புதிய கட்டண அறிவீட்டிற்கமைய, டொலரில் கொடுப்பனவு செய்யும் போது வாடிக்கையாளர்கள் டொலர் ஒன்றிற்கு 225 ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்த நேரிடும். 5 வீதம் மற்றுமொரு மேலதிக கட்டணம் அறிவிடும் வங்கிகளால் 236 ரூபாய் அறவிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.