தெதனகல பிரதேசத்தில் மூன்றரை வயதுக் குழந்தை கொரோனாவால் பலி!

பலாங்கொடை – மாரதென்ன, தெதனகல பிரதேசத்தில் மூன்றரை வயதுக் குழந்தை கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகவீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விக்னேஸ்வரன் சாதுக்ஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தை மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச பொது சுகாதார காரியாலய அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர்.