தலைமுடி இல்லாத இடத்தில முடி சீக்ரம் வளரனுமா? இதோ சூப்பரான அசத்தல் டிப்ஸ்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது.

வயதான காலத்துக்குப் பிறகு உண்டாகும் வழுக்கை தலை எல்லாம் இப்போது இளவயதிலேயே சந்திக்கிறார்கள். இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம்.

ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றாலும் வர கூடிய வழுக்கையை ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் சரி செய்ய முடியும்.  தற்போது வழுக்கை தலையில் எப்படி முடி வளர செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போ

  • விளக்கெண்ணெய் இலேசாக சூடுபடுத்தி தேங்காய் எண்ணெய் சேர்த்து 3 நாட்களுக்கு ஒருமுறை மசாஜ் செய்யவும். குறிப்பாக வழுக்கை பகுதிகளில் கவனம் செலுத்துங்கள். இலேசான மசாஜ் செய்த பிறகு 3 முதல் 5 நிமிடங்கள் தலையில் வெந்நீர் நனைத்த டவலை போர்த்தி விடுங்கள். பிறகு டவலை வெளியேற்றி தலைக்கீழாக குனிந்து கூந்தலை புரட்டுங்கள். இது கூந்தலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வழுக்கை பகுதியில் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.முடி உதிர்தலையும் உச்சந்தலை தொற்றையும் எதிர்த்து போராடுகிறது.
  • வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்ததும் அதை வடிகட்டி கொள்ளவும். தலை குளியலுக்கு பிறகு இறுதியாக கூந்தலை அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை செய்யலாம். அல்லது உலர்ந்த வேப்பம் பொடியை பேஸ்ட் ஆக்கி கூந்தலில் அலசி எடுக்கலாம்.
  • தினமும் ஒரு டம்ளர் கோதுமை புல் சாற்றை ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து குடிக்கவும். தொடர்ந்து 2 வாரங்கள் வரை இதை குடித்தால் முடி உதிர்வு கட்டுப்படும். அடர்த்தியான கூந்தலுக்கு உதவும். வழுக்கையை தடுக்கும்.
  • தினமும் இரண்டு சாம்பார் வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். வெங்காயச்சாற்றின் பேஸ்ட்டை பயன்படுத்துவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து புரதம் நிறைந்த இந்த பேஸ்ட்டை கூந்தலில் தடவி ஊறவிட்டு குளியுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்கும்.
  • பேக்கிங் சோடா பூஞ்சை தொற்று காரணமாக பொடுகு மற்றும் அரிப்பு நீங்க சிறந்த பூஞ்சை முகவராக செயல்படும். இது முடி வளர்ச்சியை மீண்டும் உருவாக்குகிறது.
  • மருதாணி இயற்கையாக முடியின் நிறத்தை மீட்டெடுக்க செய்கிறது. தலைமுடி நீண்ட மற்றும் அடத்தியாக வளர இவை உதவுகிறது. இது இழந்த முடியை மீண்டும் பெறவும் வழுக்கை குணப்படுத்தவும் உதவும் சக்திவாய்ந்த பொருள்.
  • 2 டீஸ்பூன் தயிர் உடன் கால் கப் தேங்காய்ப்பால் கலந்து எடுக்கவும். மயிர்க்கால்களை திறக்க தலைமுடியை வெதுவெதுப்பாக கழுவி எடுக்கவும். பிறகு இந்த பேஸ்ட்டை கொண்டு உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வரலாம்.
  • வெதுவெதுப்பான நீரில் 4 தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவிடவும். பிறகு தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைக்கவும். இதில் வைட்டமின் ஈ ஆயில் கலந்து உச்சந்தலையில் நன்றாக தேய்த்து எடுக்கவும். 20 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை நன்றாக விரல்களால் சொறிந்து அலசி எடுக்கவும்.