யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்று(24) மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்வடைந்துள்ளது.