காதலர்களாகயிருந்து திருமணம் செய்த ஓரினப் பாலின ஜோடிக்கு நேர்ந்த சோகம்..!!

அமெரிக்காவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த புதிதாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஒரே பாலின ஜோடியை பொலிசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். வட கரோலினா மாகாணத்தில் திங்களன்று மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 3 மணி அளவில் இருவரது சடலங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.காணாமல் போன போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனத்திலேயே இருவரது உடலும் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் மாயமாகும் முன்னர் மடிக்கணினி, கைக்கடிகாரம் அல்லது மொபைல்போன் என எதையும் எடுத்துச் செல்லவில்லை.ஏப்ரல் 15 ஆம் திகதி 27 வயதான ஸ்டிபானி மயோர்கா மற்றும் 25 வயதான பைஜ் எஸ்கலேரா ஆகிய இருவரும் மாயமாவதற்கு முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் தங்கள் இருவரது நண்பர்கள் அனைவரையும் முடக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாயமான பின்னர் இருவரும் தங்கள் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தவும் இல்லை என விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசாரும் எஃப்.பி.ஐ அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்துள்ளனர்.ஓரின ஈர்ப்பாளர்களான இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், புதிய குடியிருப்புக்கு மாறியதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருவரது உடல்களும் மிக மோசமான நிலையில் அழுகியுள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதும், கொலையா அல்லது தற்கொலையா உள்ளிட்ட மேலதிக தகவல் சேகரிக்கவும் சில நாட்கள் தேவைப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.