நேற்றையதினம் பகல் யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், ஹம்பாந்தோட்டையில் இரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று இரவு 09:19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் வடக்கு பகுதியில் இந்தியாவிற்கு அண்மித்து நேற்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.