இலங்கையில் புதிய லொக்டவுன் கொத்தணி உருவாகும் நிலை !

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியின் சரியான பிரதிபலன்களை பெறுவதற்கு சுகாதார அமைச்சிடம் உரிய வேலைத்திட்டங்கள் இல்லை என மருத்துவ ஆய்வக விஞ்ஞான தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றினை தடுப்பதற்காக நாட்டை முடக்கிய போதிலும் மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டினுள் லொக்டவுன் அலை ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாங்கள் செய்துக் கொண்டு இருப்பது சப்ரைஸ் (ஆச்சரியம்) லொக்டவுன் என்றே கூற வேண்டும்.

சப்ரைஸ் முடக்கநிலை வழங்குவது தொற்றுநோய்க்கு எதிரானது. நட்சத்திரத்தை தெரிவு செய்யும் போட்டியை போன்று ஆர்வத்தை இறுதி வரை ஏற்படுத்திவிட்டு திடீரென லொக்டவுன் என அறிவிக்கப்படுகின்றது.

திடீரென அறிவித்தமையினால் மக்கள் முடக்க நிலையின் போது தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு வெறும் கையுடன் ஓடுகின்றனர்.

Health officials use swabs to collect test samples from people at a main market, amid concerns about the spread of the coronavirus disease (COVID-19), in Colombo, Sri Lanka, August 28, 2020. REUTERS/Dinuka Liyanawatte – RC2UMI99XEDO

முடக்க நிலையின் பிரதிபலனை பெறுவதற்கு பதிலாக புதிய லொக்டவுன் கொத்தணி ஒன்றை ஏற்படுத்தும் அபாயமே உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.