தமிழர் பிரதேசத்தில் இப்படியும் ஒரு பாடசாலையா ? 100 வீத சித்தி !

கொரோணாக்கால இடருக்குள்ளும் பெற்றோரால் பராமரிக்கப்படும் அழகியதொரு ஆரம்பப் பாடசாலை பற்றிய
கிளி/சோரன்பற்று சி.சி.த.க.பாடசாலை, பேராலை, பளை. மிகக்குறைந்த மாணவர் தொகையுடன் இயங்கி வருகிறது. இயக்கச்சி சந்திக்கும் புதுக்காட்டுச்சந்திக்கும் இடையில் ஏ9வீதியோரம் உள்ள குளத்தின் அருகால் இப்பாடசாலைக்குச் செல்ல வேண்டும்.

அழகானதொரு வெளிப்புறச் சூழலை அமைத்திருக்கிறார் அதிபர் நடராசா இராமதாஸ் அவர்கள். அதிபரோடு நான்கு ஆசிரியர்களுமாக அண்ணளவாக முப்பது பிள்ளைகளைத் கொண்டு இயங்குகிறது.

பாடசாலை வளாகத்திறப்பு அருகிலுள்ள வீடொன்றில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்குள் ஒரு நேர அட்டவணையை தயாரித்து அதன்படி பாடசாலைச் சூழலை பராமரிக்கின்றனர் பெற்றோர்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்ததால்.. விடுமுறை நாட்களில் வந்து தமது ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

2017 இல் புதிய அதிபர் பொறுப்பேற்றதன் பின்னரே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சின்னஞ்சிறுவர்களைக் கொண்ட, மேற்கத்தேய வாத்திய அணி ஒன்றும் (பான்ட்) உள்ளதனை அதிபரது முகநூல் காட்டுகிறது.

அழகிய சரஸ்வதி சிலையொன்றும் கொடிக்கம்பப் பீடமும் காணப்படுகிறது. கிழக்குப்பக்க மதிலுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தூய்மையானதும் அழகானதுமான நடைபாதைகள் காணப்படுகின்றன. ஊரவர்கள் பூஞ்செடிகளில் அதிக கவனம் எடுக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

அண்மைக்காலமாக தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சாதிக்கிறார்கள். நான்கு ஐந்து மாணவர்கள் பரீட்சை எழுதினாலும், அத்தனைபேரும் சித்தியடைகிறார்கள்.

வாழ்த்துகள்.. பாடசாலைச் சமூகத்தினருக்கு.
தொடர்புக்கு, அதிபர் – 0776660389

முகநூற்பதிவு :முல்லைத்தீபன் வே