கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உயிரிழந்துள்ளார்.

மங்கள சமரவீரவிற்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் கோவிட் – 19 தொடர்பான நிமோனியா ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே தனது 65ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.