இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்-ஆபத்தான நிலையில் 8 நோயாளிகள்..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த 8 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.8 பேரில் 7 பேர் கொழும்பு IDH வைத்தியசாலையிலும் ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆகும். அவர்களில் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.வைரஸ் தொற்றிற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளரகளின் எண்ணிக்கை 238ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதாரதுறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.